பாலக்கோடு அருகேதொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர் மீது வழக்கு

Update:2023-05-09 00:15 IST

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள கடைமடை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார், அப்போது அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27) என்பவர் தனக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி தருமாறு கேட்டார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என கூறி செல்வம் சிகரெட் வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்த முயன்றார். அதனை செல்வம் தடுத்தபோது அவருடைய கையில் வெட்டு விழுந்து வலியால் அலறினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்