இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு வெளியிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
இந்து மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்சியினர் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவை கெம்பட்டி காலனி பாளையன்தோட்டத்தை சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் சரவணன் (வயது 42) கோவை வெரைட்டிஹால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.