சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா
பணகுடி பாஸ்கரபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.;
பணகுடி:
பணகுடி பாஸ்கரபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. இதில் வில்லிசை, குடிஅழைப்பு, பால்குட ஊர்வலம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ேமலும் விரதம் இருந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.