மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம்

மாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது.;

Update:2022-07-26 00:15 IST

கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் குளமங்கலம் தெற்கு வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி பூச்சொாிதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து படையலிட்ட நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு காப்புக்கட்டுதலுடன் ஆடிப் பெருந் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வந்தது. தினசரி பால்குடம் எடுத்தல் மற்றும் அன்னதான நிழ்ச்சிகளும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மாலை காய், கனி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் எழுந்தருளினர். பின்னர் தேர்களை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர்களை பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்