செல்போன் பயன்படுத்தக்கூடாது என தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

செல்போன் பயன்படுத்தக்கூடாது என தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-06-17 04:12 IST

பனமரத்துப்பட்டி:

பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமம் ரெட்டைமலைகரடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன். இவரது மகன் பிரகாஷ் (வயது 20). 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பிரகாஷ் இரவு நேரங்களில் தூங்காமல் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷின் தந்தை சின்னப்பையன் நேற்று முன்தினம் இரவு அவரை திட்டி உள்ளார்.

இதில் மனமுடைந்த பிரகாஷ் வீட்டின் அருகில் தோட்டத்திலுள்ள ஊஞ்ச மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை பிரகாஷ் மரத்தில் பிணமாக தொங்குவதை கண்ட அக்கம் பக்கத்தினர் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்