இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
களக்காடு:
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் ஏர்வாடி பாண்டி, களக்காடு முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைதலைவர் பெரும்படையார், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், சிதம்பரபுரம் கிளை செயலாளர் ஜவஹர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன், மாவட்ட குழு உறுப்பினர் லெனின் முருகானந்தம், ஒன்றிய துணை செயலாளர் அயூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக கவர்னரை கண்டித்தும், விவசாயிகள் மீது, களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும், களக்காட்டில் சிக்கிய வைடூரியக் கல் விவகாரத்தில் உயர் மட்ட விசாரணை கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.