கோவை
கோவை சேரன்மா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருடைய 9 வயது மகன் அங்குள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் வகுப்பறையில் குறும்பு செய்ததாக தெரிகிறது. இதை ஆசிரியர் பல முறை கண்டித்து உள்ளார்.
ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சிறுவன்மீண்டும் குறும்புத்தனம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அந்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன் பெற்றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் அந்த ஆசிரியை மீது புகார் அளித்தனர்.