ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-09-14 17:12 IST

காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த தெங்கால் பகுதியிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரிகள் பொன்னையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு செல்லும் பிரதான சாலையில் தெங்கால் கோவில் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

அப்போது கடத்துவதற்காக 23 மூட்டைகளில் சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திருவலம் நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் அரிசியை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்