புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி கைது
புகையிலை பொருட்கள் விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனா்.;
மங்கலம்பேட்டை,
மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 52), அவரது மனைவி பூங்கொடி (48) ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.