பா.ம.க. தேர்தல் பணி குழு நிர்வாகிகள் கூட்டம்
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. தேர்தல் பணி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.;
தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. ஒன்றிய, நகர, பேரூர் தேர்தல் பணிக்குழு தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி சந்திரா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் வாசுநாயுடு தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன், முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முகவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு அமைப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பா.ம.க. மாவட்ட தலைவர் செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் காமராஜ், மனோகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் சக்தி உள்பட தேர்தல் பணிக்குழு ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.