தினத்தந்தி- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி

பாளையங்கோட்டையில் ‘தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Update: 2022-06-04 19:49 GMT

நெல்லை:

பாளையங்கோட்டையில் 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். கல்வி கண்காட்சி

பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் அடுத்ததாக என்ன பட்டப்படிப்பை தேர்வு செய்து படிப்பது என்று முடிவெடுக்கும் இந்த தருணம் மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக அமையும் அந்த முடிவை அவர்கள் சரியாக எடுக்க வேண்டும்.

பிளஸ்-2 முடித்த பிறகு எந்த துறையை தேர்வு செய்யலாம் என்று ஆலோசித்து கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் 'தினத்தந்தி'- எஸ்.ஆர்.எம். இணைந்து கல்வி கண்காட்சியை நடத்துகிறது. இந்த கல்வி கண்காட்சி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று காலை தொடங்கியது.

பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கல்வி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து முத்தமிழ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ், பாரத் ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இம்மானுவேல், ஏ.ஜெ.வி.கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வக்கீல் ஜெயபாலன், நெல்லை 'தினத்தந்தி' மேலாளர் த.ஜனார்த்தனன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.

ஆலோசனைகள்

எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ் முதுநிலை மேலாளர் வெங்கடநாராயணன், இந்துஸ்தான் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ் பேராசிரியர் ஞானசேகரன், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ்-டெக்னாலஜிஸ் பேராசிரியர் அருண்குமார், அமெட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரன், பாரத் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் ரிசர்ச் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஹரன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர், கல்வி ஆலோசகர் ராஜா மற்றும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், பேராசிரியர்கள் கல்வி ஆலோசனைகளை வழங்கினார்கள்.

50-க்கும் மேற்பட்ட அரங்குகள்

இந்த கண்காட்சியில் சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூட்ஸ், கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகம், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஸ்காட் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ்- டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், ஆல்பா என்ஜினீயரிங் கல்லூரி, அமெட் பல்கலைக்கழகம், அப்பல்லோ கல்வி நிறுவனங்கள், சேது பொறியியல் கல்லூரி, மெப்கோ என்ஜினீயரிங் கல்லூரி,

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், சி.எம்.எஸ்.காலேஜ் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, அன்னை பாத்திமா காலேஜ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், பி.எஸ்.என்.ஏ.காலேஜ் ஆப் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை கரோல் எஜூகேஷனல் கன்சல்டன்சி, கோவை குமரகுரு கல்லூரி, பெங்களூரு பிரசிடென்சி பல்கலைக்கழகம், மதுரை நேஷனல் இன்ஸ்ட்டிடியூட், ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, சென்னை இந்தியன் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளி, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி, மத்திய அரசு காலனி பயிற்சி நிலையம், சென்னை பிரத்யுஷா பொறியியல் கல்லூரி, ஜார்ஜியாவை சேர்ந்த ஐரோப்பிய மருத்துவ பல்கலைக்கழகம், கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி,

கோவை கட்டிட பொறியியல் கல்லூரி, பிலிப்பைன்ஸ் குல்லாஸ் மருத்துவ கல்லூரி, சென்னை ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி, மதுரை சுப்புலட்சுமி லட்சுமிபதி குழும கல்லூரிகள், சென்னை கிரஸண்ட் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை பாரத் உயர்கல்வி கல்லூரி, சென்னை அமிர்தா ஓட்டல் மேலாண்மை கல்லூரி, நாமக்கல் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை கே.சி.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி, திருச்சி ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்லூரி, கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி, சேலம் சங்ககிரி விவேகானந்தா கல்வியியல் கல்லூரி, மதுரை ஏ.எப்.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை ரெமோ விமான பொறியியல் கல்லூரி, சென்னை பைட்டர் விங்ஸ் ஏவியேசன் கல்லூரி உள்பட 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

திரண்டு வந்த மாணவ-மாணவிகள்

இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் தங்கள் பெற்றோருடன் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொரு அரங்குக்கும் சென்று தாங்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்பது பற்றிய ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

குறிப்பாக மருத்துவம், என்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங், கடல்சார் படிப்புகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் பற்றியும், அவற்றில் சேர்ந்து படிப்பதற்கான வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். அவர்களுக்கு அந்த அரங்குகளில் இருந்த பேராசிரியர்கள், ஊழியர்கள் தெளிவான விளக்கம் அளித்தனர். மேலும் 'நீட்' தேர்வை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து வல்லுனர்கள் விளக்கிக் கூறினார்கள். கல்வி நிறுவன அரங்குகளில் அந்த நிறுவனங்களைப் பற்றிய துண்டு பிரசுரங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

நல்ல வாய்ப்பு

இந்த கல்வி கண்காட்சி குறித்து சாராள் தக்கர் மகளிர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் கூறுகையில், 'தினத்தந்தி நிர்வாகம் பாமரரும் படிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு கல்விப்பணிகள் செய்து வருகிறது. இந்த கல்வி கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஒரே இடத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம். எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்ற அனைத்து தகவல்களும் கிடைப்பது மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை மாணவ-மாணவிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.

பாரத் ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் இம்மானுவேல் கூறுகையில், 'நாங்கள் படிக்கின்ற காலத்தில் இதுபோன்ற தவல்களை சென்னையில்தான் சேகரிக்க முடியும். ஆனால், கிராமப்புற மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம். என்ன வேலை வாய்ப்புள்ள கல்வி படிக்கலாம் என்பது குறித்து ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் இங்கே கிடைக்கிறது. மேலும், கல்வி கட்டணம், என்ன சலுகைகள், என்ன படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது குறித்து இங்கு உள்ளவர்கள் கூறுகின்ற ஆலோசனை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இந்த கண்காட்சியை நடத்துகின்ற 'தினத்தந்தி' நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

மாணவர்களுக்கு வழிகாட்டி

முத்தமிழ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜேஷ் கூறுகையில் 'மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க உதவியாக இந்த கல்வி கண்காட்சி விளங்குகிறது. 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளதால் இதை பார்க்கின்ற மாணவ-மாணவிகள் தங்கள் விரும்புகின்ற பாடப்பிரிவு எந்த கல்லூரியில் உள்ளது என்பதை தெரிந்து அதை தேர்வு செய்ய வசதியாக உள்ளது. நர்சிங், மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புகளை படிப்பது குறித்தும், வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

ஏ.ஜெ.வி. கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வக்கீல் ஜெயபாலன் கூறுகையில் 'கிராமப்புற மாணவர்கள் எங்கே செல்வது, எப்படி செல்வது? என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிளஸ்-2 படித்த பின்பு என்ன படிப்பு, எங்கு படிக்கலாம் என்று விழிப்புணர்வு காட்டுகின்ற இந்த கண்காட்சி மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், கைகாட்டியாகவும் உள்ளது. மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க உதவியாக இந்த கல்வி கண்காட்சி நடத்துகின்ற 'தினத்தந்தி' நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கல்வி கண்காட்சி மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தேர்வு செய்வதற்கு சிறந்த இடமாக உள்ளது' என்றார்.

இன்று நிறைவு

'தினத்தந்தி' கல்வி கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்