அரசுக்கு எதிராக அவதூறு - அ.தி.மு.க. பிரமுகர் கைது

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-28 01:25 GMT

கரூர்.

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள பெரியவடுகப்பட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (வயது 37). இவர் கரூர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் ஆற்று மணல் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வெட்டிக்கொலை ெசய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நவலடி கார்த்திக் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரூர் டவுன் போலீசார் நவலடி கார்த்திக் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்து அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்