ஒப்பந்த பணியாளர்கள் நியமன முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் முறையை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
மயிலாடுதுறை நகராட்சியில் துப்புரவு போன்ற பணிகளுக்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் முறையை கைவிடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியில் பொது சுகாதாரம், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க கூடாது. அந்த பணியில் இருந்து நிரந்தர தொழிலாளர்களை மாற்றுப் பணிக்கு அனுப்பக் கூடாது. 2017-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் ராஜ்மோகன், நீதிசோழன், மனோன்ராஜ், சர்புதீன், சம்பத், மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.