சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update:2023-08-19 01:45 IST

பொள்ளாச்சி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரிடமே ஒப்படைக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய தலைவர் ருக்குமணி, செயலாளர் ஜோதிமணி, துணை செயலாளர் தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்