அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-09 17:16 IST

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் டாக்டர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு எதிரே தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். பொருளாளர் முரளி உள்பட 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்