புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-01 18:45 GMT

சோளிங்கர்

புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 6-ம் நாளையொட்டி பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தயாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது,.

இதனை தொடர்ந்து மாலையில் பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தங்க கேடயத்திலும் அமிர்தவல்லி தாயார் வெள்ளி கேடயத்திலும் எழுந்தருளி மங்கள வாத்தியங்களுடன் கோவில் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 25-க்்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

========

Tags:    

மேலும் செய்திகள்