தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-25 19:15 GMT

தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூத்தகுடி சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் தனால் இரவு நேரத்தில் சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரதில் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இருளில் மூழ்கி கிடக்கும் சாலை

புதுக்கோட்டையில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் சாலையோரம் மின் விளக்குகள் உள்ளன. இதில் இரவு நேரங்களில் சில நாட்கள் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இந்த சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. வாகனங்கள் செல்லும் போது அதில் உள்ள விளக்குகளின் வெளிச்சங்கள் மட்டும் காணமுடிகிறது. மின் விளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையை கடக்க அச்சப்படும் பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காலாடிபட்டி சத்திரம் என்ற ஊர் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பலஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. அதுமட்டுமின்றி எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்றவண்ணம் உள்ளதால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். ஆகவே சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடைகளில் வர்ணம் பூசவேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே 2 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல காசிம்புதுப்பேட்டை அருகே ஒரு வேகத்தடை என பல இடங்களில் போக்குவரத்து அதகமுள்ள பிரதானச் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளதை வாகன ஓட்டிகளுக்கு அடையாளப்படுத்துவதற்காக வெள்ளை கோடுகள் இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் வெள்ளை கோடுகள் அமைத்து விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெப்பக்குளம் பகுதிக்கு செல்லும் மின்கம்பமானது விராலிமலையிலிருந்து மதுரை செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. இந்த மின்கம்பமானது பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதனால் மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்புக்கூடு போல் காட்சியளித்து வருகிறது. மேலும் இந்த மின்கம்பம் உள்ள இடமானது பிரதான சாலை என்பதால் தினமும் அதிகஅளவில் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அந்த இடத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

Tags:    

மேலும் செய்திகள்