புகழூர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கல்

புகழூர் நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

Update: 2022-07-17 18:35 GMT

புகழூர் நகராட்சியினை மாசற்ற தூய்மையான நகராட்சியாக உருவாக்கிட, நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் வீட்டுக் கழிவு பொருட்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுப்பதற்கு வீட்டிற்கு 2 பிளாஸ்டிக் பக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தினையும், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டினை புகழூர் நகராட்சி பகுதிகளில் முற்றுலுமாக ஒழித்து பசுமையான நகராட்சியாக உருவாக்கிட பொதுமக்களின் பங்களிப்போடு வீட்டிற்கு 2 மஞ்சள் பைகளை வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கும் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இந்த திட்டத்தினை 2-வது வார்டு பகுதியில் புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன், நகராட்சி கமிஷனர் கனிராஜ், நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்