கடத்தூரில் குடிநீர் வினியோகத்தைபேரூராட்சி தலைவர் ஆய்வு

Update:2023-09-07 00:15 IST

மொரப்பூர்

கடத்தூர் பேரூராட்சியில் 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து பேரூராட்சி தலைவர் கே.மணி நேரில் ஆய்வு செய்தார். அப்போது குழாயில் தண்ணீர் பிடிக்கும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மின்மோட்டார் பொருத்தியோ அல்லது அனுமதி இல்லாமல் குழாய் அமைத்தோ யாரேனும் தண்ணீர் பிடிக்க கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பேரூராட்சி துணை தலைவர் ஜெ.தீர்த்தகிரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், சின்னப்பொண்ணு, பரமேஸ்வரி மாதையன், பேரூராட்சி பணியாளர்கள் மாதன், விஜயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்