அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் சாவு

தம்மம்பட்டி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-10-21 00:18 IST

தம்மம்பட்டி

தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி ஊராட்சி காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 34). டிரைவர். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு 2 வயதில் தினேஷ்குமார் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் வெங்கடேசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பாரதி கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி தன்னை பிரிந்து சென்றதை நினைத்து வருந்திய வெங்கடேஷ் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்தாராம். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்து விட்டார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்