சிவகங்கை: கபடி விளையாடி அசத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசி

பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் தி.மு.க. எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.;

Update:2025-12-21 18:37 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக மானாமதுரை தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், களத்தில் இறங்கி கபடி விளையாடி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்