நீர்வரத்து இல்லாததால்சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை

நீர்வரத்து இல்லாததால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இங்கு ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் சுருளி அருவியில் நேற்று மதியம் முதல் நீர்வரத்து திடீரென நின்றது. அருவி பகுதி முழுவதும் தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது.

இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து கம்பம் கிழக்கு வனப்பகுதி ரேஞ்சர் பிச்சைமணி கூறியதாவது, அருவியில் நீர் வரத்து அடியோடு நின்றதால் சுற்றுலா பயணிகள் தண்ணீர் இன்றி பாறையாக இருக்கும் பகுதியை பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது அருவியில் குடிப்பதற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை சார்பில் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்