போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா (வயது 65). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சண்முகையாவை கைது செய்தனர்.