விஷம் குடித்து முதியவர் தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;
சுல்தான்பேட்டை
திருப்பூர் மாவட்டம் சங்கமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 71). இவர் கடந்த 7 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். தண்டபாணியை சுல்தான்பேட்டை அருகே செல்லியகவுண்டன்புதூரில் உள்ள அவரது மகள் தனது வீட்டில் தங்க வைத்து பராமரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தண்டபாணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.