தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்... முடிவுறாத திமுக அரசின் அராஜகம்...! - நயினார் நாகேந்திரன்

போராட்டத்தை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது திமுக அரசு என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-27 20:45 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கையையும் நிறைவேற்றித் தராமல், பிடுங்கப்பட்ட வேலையையும் திருப்பித் தராமல், கைவிலங்கு பூட்டுவதில் மட்டும் குறியாக இருந்து, அடிப்படை வசதிகள்கூட இன்றி அடைத்து வைத்து, அறவழிப் போராட்டத்தை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறது திமுக அரசு.

சட்டவிரோதமாக இடைநீக்கம் செய்யப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த தூய்மைப் பணியாளர் ரவிக்குமார், கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்னும் எத்தனை ரவிக்குமார்கள் பலியானால், திமுக அரசின் சமூகநீதி உயிர்பெறும், தூய்மைப் பணியாளர்களின் நலன் அவர்கள் கண்ணில் புலப்படும்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்