விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை;

Update:2023-01-07 00:15 IST

ஆனைமலை

ஆனைமலை அருகே உள்ள குப்புச்சிபுதூரை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 64). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குணசேகரன், வீட்டில் யாரும் இல்லாதபோது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்