கரூர் சம்பவம்: தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.;

Update:2025-12-08 12:07 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், பொதுமக்கள், போலீசார், மத்திய மின்வாரிய அதிகாரிகள், த.வெ.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் கரூர் வருகை புரிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இந்நிலையில் கண்காணிப்பு குழுவிடம் மனுக்கள் அளித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் அருள்குமார், புதிய திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் உள்பட 6 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் விசாரணைக்கு இன்று ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்