திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-27 19:15 GMT

திருவட்டார்ூ

திருவட்டார் அருகே உள்ள கேசவபுரம் வடசேரிவிளையை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 67). இவருக்கு ராஜம் (55) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளுக்கு உள்ளனர். மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்த நிலையில் தேவதாஸ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்து மிகவும் அவதிபட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்