மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.;

Update:2022-06-10 20:59 IST

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ் (வயது 67). இவர் அந்த பகுதியில் கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்த வேல்முருகன் என்ற பொன்வேல் (37) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கோவில்ராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவில்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்