மின் மோட்டார் பழுது: குடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளி மாணவர்கள் அவதி

பள்ளியில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றனர்.

Update: 2022-12-08 09:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி இயக்கப்பட்டு வருகிறது. அந்த மின் மோட்டாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது.

இதனால் மாணவர்கள் குடிநீர் இன்றியும், கழிவறைக்கு பயன்படுத்த தண்ணீர் இன்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரின்றி கழிவறை துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதுவரை மின்மோட்டார் பழுதை சீரமைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மின்மோட்டாரை உடனடியாக பழுது நீக்கி மாணவர்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்