பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.;

Update:2023-03-02 00:11 IST

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இதில், வயது வந்தோர் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்போட்டியானது சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜபிரியன், உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் முதலிடம் பெற்ற அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பவல்லிக்கு முதல் பரிசாக ரூ.1,000, 2-வது பரிசு பெற்ற ஏந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அசோக்குமாருக்கு ரூ.750 மற்றும் 3-ம் பரிசு பெற்ற ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாரதிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்