என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

உப்பிடமங்கலத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.;

Update:2023-06-13 00:34 IST

என்ஜினீயர்

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் ஏ.பி. நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் பிரகாஷ் (வயது 25). என்ஜினீயர். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக பிரகாஷ் யாரிடமும் பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பிரகாசின் தந்தை சண்முகம் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பிரகாஷ் சேலையில் தூக்குமாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

தற்கொலை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பிரகாசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை குறித்து பிரகாசின் தாய் விஜயலட்சுமி வெள்ளியணை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரகாஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்