தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
சிவகங்கை நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
சிவகங்கை நகராட்சியில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நகர சபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். இதையொட்டி தூய்மை பணியாளர்களுக்கு தேவையான குப்பை அள்ளும் கூடை, சாக்கடை கால்வாய் மண் அள்ளும் கரண்டி, கூட்டுமாறு, மண்வெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்களை தலைவர் மற்றும் ஆணையாளர் வழங்கினர். நிகழ்ச்சியில் குடிநீர் திட்ட கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் தன்னாயிர மூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், கணேசன், சந்திரன் மற்றும் தூய்மை பாரத மேற்பார்வையாளர் குருநாதன், பரப்புரையாளர்கள் பிரமிளா, கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.