யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள்
யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.;
சேத்துப்பட்டு
யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கு. உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது பெரண மல்லூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்மாவட்ட பூச்சியில் வல்லுனர் துரைராஜ், நேர்முக உதவியாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார மேற்பார்வையாளர்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பேரூராட்சி தலைவர் வேணி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு யானைக்கால் நோயால் பாதித்த 58 பேருக்கு பிளாஸ்டிக் அன்ன கூடை, சோப், தண்ணீர் எடுப்பதற்கான பிளாஸ்டிக்கப், டவல், பிளாஸ்டிக் நாற்காலி ஆகியவற்றை வழங்கினர். முன்னதாக சுகாதார மேற்பார்வையாளர் குமார்கோபாலகிருஷ்ணன் யானைக்கால் நோய் உள்ளவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பூங்காவனம், மோனிஷா மதன்குமார் சிவகாமி மனோகரன், சிவராமன், மருந்தாளுநர் சந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.