உயர்கல்வி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

உயர்கல்வி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்

Update: 2023-02-28 18:45 GMT

பரமக்குடி

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் சார்பில் உயர் கல்வியில் பதிவு விகிதத்தை அதிகரிக்க பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி தரத்தை விளக்கும் வகையில் கல்லூரி களப்பணி நடைபெற்றது. இதில் பரமக்குடி, காமன்கோட்டை, நயினார்கோவில், சத்திரக்குடி, மஞ்சூர், புதுவயல் ஆகிய ஊர்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த மாணவர்களை பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்துடன் கல்லூரியில் வரவேற்றனர். இதற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துறைத்தலைவர்கள் கணேசன், அறிவழகன், கண்ணன், ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் வரவேற்றார். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு துறைவாரியாக சென்று மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்கு காணொளி மூலம் வேலை வாய்ப்பு குறித்து செயல் விளக்கம் மற்றும் பாடரீதியான தகவல்கள் ஒளிபரப்பப்பட்டது. இதில் கல்லூரியின் கண்காணிப்பாளர் ரகுபதி உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் மூலம் கல்லூரிக்கு சென்று களப்பணி குறித்து அறிந்து கொண்ட மாணவ-மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்