ரியல் எஸ்டேட் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு

நெல்லையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-04-21 00:54 IST

நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது50). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் சம்பவத்தன்று பேச்சிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 2 பேரும,் பேச்சிமுத்துவும் சேர்ந்து ஜெயக்குமாரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி ரூ.1 லட்சம் வரை பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்