பெண் தூக்குப்போட்டு தற்கொலை

உசிலம்பட்டி அருகே இல்ல காதணி விழா நடைபெற இருந்த நிலையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;

Update:2023-03-26 02:09 IST

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே உள்ள கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அமர்நாத் - மீனா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த சூழலில் இந்த குழந்தைகளுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காதணி விழா நடத்த திட்டமிட்டு உறவினர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏறபட்டது. கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மீனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் உயிரிழந்த சம்பவம் அறிந்து உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணின் உறவினர்கள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து அவர்களது உறவினர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்