103 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதி உதவி-முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தகவல்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 103 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்பட்டதாக முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறினார்.;

Update:2023-04-07 00:15 IST

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 103 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்பட்டதாக முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் கூறினார்.

நிதி உதவி

சிவகங்கை மவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த கல்வியாண்டில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பக்கட்டணம் 54 மாணவர்களுக்கும், மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவு தேர்விற்கான விண்ணப்பத்தொகை 6 மாணவர்களுக்கும், ஜே.இ.இ. முதன்மை தேர்வு 2 எழுதுவதற்கு 43 மாணவர்களுக்கு என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 2023-ல் நடைபெற்ற ஜே.இ.இ. முதன்மை தேர்வில் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ம.கார்த்திக், அருள் சச்சின் ஜான் பிரிட்டோ, சாலைகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சவுமியா, மதன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றனர்.

பயிற்சி

அதிக மதிப்பெண் பெற்ற இந்த மாணவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை 45 நாட்கள் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அட்வான்ஸ் தேர்விற்கான உண்டு உறைவிடப் பயிற்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீதா லெட்சுமி, உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமா பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்