தேசிய அளவிலான கிக் பாக்சிங்கில் வெற்றிபெற்ற மாணவிக்கு நிதி உதவி

தேசிய அளவிலான கிக் பாக்சிங்கில் வெற்றிபெற்ற மாணவிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது;

Update:2022-10-19 01:25 IST

பேரையூர், 

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஆதனூரை சேர்ந்தவர் கோகிலா ஈஸ்வரி, பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், டெல்லியில் சர்வதேச அளவில் நடக்கக்கூடிய கிக் பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். கோகிலா ஈஸ்வரியை ஊக்குவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் பாண்டிமுருகன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்