அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் பெண் அனுமதி

உடுமலையில் தீக்காயத்துடன் பெண் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கணவர் எரித்துக்கொல்ல முயன்றதாக பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-08-07 23:05 IST

உடுமலையில் தீக்காயத்துடன் பெண் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கணவர் எரித்துக்கொல்ல முயன்றதாக பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இளம் பெண்

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட யு.எஸ்.எஸ். காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி மல்லிகா(வயது 32). இவர்களுக்கு திவ்யா மற்றும் பிரசன்னா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். மல்லிகா தனது கணவர் செல்வராஜுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மல்லிகா தனது கணவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த சூழலில் நேற்று மாலை செல்வராஜ் மற்றும் மல்லிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

தீக்காயத்துடன் அனுமதி

ஆனால் மல்லிகாவை தீக்காயத்துடன் சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிலர் கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மல்லிகா மண்ெணண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக செல்வராஜ் கூறினார். அதை மறுத்த மல்லிகா, தனது கணவர் மண்ெணண்ணை ஊற்றி எரித்துக்கொல்ல முயன்றதாக கூறினார்.

இது குறித்து உடுமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்