தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2022-05-27 02:08 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் வரதராஜன், சேரன்மாதேவி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தீ விபத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளித்தார்.

இதில் தலைமை மருத்துவர் சாந்தி, உதவி மருத்துவர்கள் சாந்தி சுசீந்திரன், அருணாசலம் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்