முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை நடந்துள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை நலப்பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.

Update: 2023-07-22 12:49 GMT

போளூர், ஜூலை.23-

போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக மூட்டு மாற்று அறுவை நடந்துள்ளது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களை நலப்பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.

அறுவை சிகிச்சை

போளூரை சேர்ந்த பாகாஷ் (வயது 70) என்ற முதியவர் நீண்ட நாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் அவர் போளூர் அரசு ஆஸ்பத்திரி எலும்பு முறிவு பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்,

அவரை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விமல் ராஜ் பரிசோதனை செய்தபோது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார்.

எனவே தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலமேல் அறிவுறுத்தலின்படி முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாகாசுக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

பாராட்டு

சிறப்பான முறையில் வெற்றிகரமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவை திருவண்ணாமலை மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் பாபுஜி அனைவரையும் பாராட்டினார்.

இதற்கு முன்னதாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சென்னை அல்லது வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்