அரசு மருத்துவமனையில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி

மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.;

Update:2022-11-09 15:26 IST

சென்னை,

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்க பறக்கும் அமைத்து சோதனை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பின்பற்ற யோசனை வழங்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளது எனவும் புகார் பெட்டிகளும் உள்ளன எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்