உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு
உணவு பாதுகாப்பு அதிகாரியை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது.;
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் டி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தன்(வயது 44). தற்போது இவர் திருச்சி பொன்னகர் 11-வது கிராஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று பொன்னகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதில் காயமடைந்த வசந்தன், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.