வனப்பகுதியில் தீவிபத்து

கடையநல்லூர் அருகே வனப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.;

Update:2023-08-09 00:30 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கருப்பாநதி அணை பகுதியில் காய்ந்து கிடந்த இலை சருகுகளில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீமளமளவென பரவியது. இதையடுத்து கடையநல்லூர் வன ரேஞ்சர் சுரேஷ் உத்தரவின் பேரில் வனவர்கள் முருகேசன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் வனக்குழுவினர்கள் செடி, கொடி, தலைகளைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்