கனிவான நற்குணத்தால் அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் விஜயகாந்த்: அமைச்சர் தங்கம் தென்னரசு

விஜயகாந்த் நினைவு நாளில் அவர் ஆற்றிய மக்கள் தொண்டினை நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-28 10:17 IST

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் பருவநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர், தமிழ்நாட்டு மக்களின் அன்புக்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுநாள் இன்று.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி, துணிச்சல் மிக்க ஆற்றலாலும், கனிவான நற்குணத்தாலும் அனைவரின் நன்மதிப்பினைப் பெற்றவர். அவரது இந்த நினைவு நாளில் அவர் ஆற்றிய மக்கள் தொண்டினை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்