பார்வர்டு பிளாக் கட்சி மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவரணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-12 18:45 GMT

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாணவரணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திவாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்