2 பெண்களிடம் ரு.7¾ லட்சம் மோசடி

Update: 2023-04-22 19:30 GMT

பகுதிநேர வேலை இருப்பதாக கூறி சேலத்தில் 2 பெண்களிடம் ரூ.7¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதிநேர வேலை

சேலம் உடையாப்பட்டியை சேர்ந்தவர் மோகனம்மாள் (வயது 34). இவர் இன்ஸ்டாகிராமில் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்த விளம்பரத்தை பார்த்தார். அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து அந்த நபர், இன்ஸ்டாகிராமில் ஒரு டாஸ்க் அனுப்பினார். இதற்காக குறிப்பிட்ட பணம் அனுப்புமாறு கூறினார்.

இதை உண்மை என நமபிய மோகனம்பாள், பல்வேறு தவணையாக அவரது வங்கி கணக்குக்கு ரூ.5 லட்சத்து 35 ஆயிரம் அனுப்பினார். அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகனம்மாள் இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீசார் விசாரணை

இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பட்குதியை சேர்ந்தவர் ரஞ்சிதா (28). இவரிடமும் ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறி ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ரஞ்சிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்