பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.;

Update:2023-07-30 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் டி.என்.டி.டி.ஏ. ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜேம்ஸ் அகஸ்டின் தலைமை தாங்கினார். பழங்குளம் பஞ்சாயத்து தலைவர் செல்லக்கனி செல்லத்துரை முன்னிலை வகித்தார். சேகரகுரு பாஸ்கர் அல்பர்ட் ராஜா ஆரம்ப ஜெபம் நடத்தினார். பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம் வரவேற்றார். இதில் 18 மாணவ- மாணவிகளுக்க இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சாத்தான்குளம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பாஸ்கர், வட்டார துணை செயலாளர் நல்லதம்பி, வடக்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் மாரித்தாய், ஞான புஷ்பம் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்