இலவச கண் பரிசோதனை முகாம்

அம்பையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.;

Update:2023-01-20 01:55 IST

அம்பை:

அம்பையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சார்பில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். நெல்லை அகர்வால் கண் மருத்துவமணை தென்மண்டல மருத்துவ இயக்குனர், தலைமை மருத்துவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் லயனல் ராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்